இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெறும்; அதுதான், என் உண்மையான மகிழ்ச்சி : முதல்வர் ஸ்டாலின் உரை

By 
Tamil Nadu ranks first in India; That is, my real joy Chief Stalin's speech

தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அந்தந்த மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றன. 

அந்த வகையில், இன்று கோவையில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநாட்டின்போது, தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை 2021-யை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது :

தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை வைத்து அனைத்து தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்கள் சார்பில் வந்திருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலிடம் :

சோதனையான காலத்திலும், தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஜூலை மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினோம். 

செப்டம்பரில், ஏற்றுமதியாளர் மாநாடு நடத்தப்பட்டது. மீண்டும் நவம்பர் மாதத்தில் அடுத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்திருக்கிறோம். 

கடந்த 5 மாதங்களில், 3-வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.  இதே வேகத்தில் போனால், முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெறும்.

நாம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கினை அடைவது வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் அளித்துக் கொண்டு வருகிறோம்.

மகிழ்ச்சி :

மேலும், தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2,3-ம் கட்ட நகரங்களில் நியோ டைடல் பார்க்குகள் அமைக்கப்படும்.

இந்த 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், வரவுள்ள திட்டங்களால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி' என்றார்.
*

Share this story