பரட்டை என்ற கிண்டலுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி..
Sun, 12 Feb 2023

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.
இதில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் மாணவிகள் மத்தியில் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் பேசியதாவது:- என்னை கருப்பு என்றும், பரட்டை என்றும் கிண்டல் செய்கிறார்கள்.
என்னை கருப்பு என்று சொன்னால் நெருப்பாய் மாறி உயர்ந்து கொண்டே இருப்பேன். என்னை பரட்டை என்று சொன்னால் பறந்து பறந்து உயர்ந்து போய்க் கொண்டே இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.