பிரதமருக்கு நன்றி : ஓ.பன்னீர்செல்வம்

By 
Thanks to the Prime Minister O. Panneerselvam

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால், வாகன ஓட்டிகள் அரசு மீது கடும் அதிருப்தி அடைந்தனர். 

மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. 

சில மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. ஆனால், மத்திய அரசு கலால் வரியை குறைக்காமல் இருந்தது. 

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. 

பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்துள்ளதால், இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. 

அதேசமயம், பல்வேறு மாநிலங்களும் தங்கள் பங்கிற்கு வாட் வரியை குறைத்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். 

கலால் வரியை குறைத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்றும், அரசின் இந்த முடிவு,  சமூகத்தின் அனைத்து பிரிவினரின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
*

Share this story