"அதுதான் அம்சம் இது இம்சை" : எடப்பாடியின் அங்கலாய்ப்பு குறித்து மருது அழகுராஜ் விளாசல் 

By 
marudhu201

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :

* இட ஒதுக்கீடு மூலம் தென்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல்.. சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் ஆகியோரை துரோகத்தால் வீழ்த்தி விட்டதாக நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி..

தன் சகாக்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சகிதமாக இதனை வீரவரலாறு எனும் தலைப்பிட்டு கொண்டாட, மதுரைக்கு பிற பகுதிகளில் இருந்து ஆள் திரட்டுகிறார்கள் என்றால்..

இது விபரீத விளையாட்டு அல்லவா..

* வாங்க தம்பிகளா திருச்சிக்குன்னு அழைத்த ஒரு வாரத்தில்.. அலைகடல் போல் திரண்டு வந்து, காவிரிக் கரைக்கு கடல் இல்லை எனும் குறை தீர்த்தது பார்.. லட்சக்கணக்கான தொண்டர்கள் கூட்டம். அதுதான் தலைவனுக்கான அம்சம்.

அதை விட்டுவிட்டு, ஊர் ஊரா போயி பத்திரிகை வச்சு பட்டுவாடா நடத்தி வாங்க மதுரைக்குன்னு கெஞ்சுறது
இருக்கே..

இது தலைமைக்கு பொருந்தாத இம்சையல்லவா..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story