பாஜக.வை கழற்றி விட்டதால், இனி அதிமுகவிற்கு வெற்றி முகம்..?

By 
naththam

பாஜகவை கழட்டி விட்டு, ஓடத் தொடங்கியுள்ளதால்,  அதிமுக எழுச்சி கண்டுள்ளது என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் அதிமுக சார்பில் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசும்போது " வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பிஜேபி கூட்டணியில் இருந்து நாம் வெளியேறியதன் மூலம் அதிமுக வெற்றிக்கு தடையாக இருந்த அனைத்தும் அகற்றப்பட்டு விட்டது.

மேலும், "பெரும் சுமையை சுமந்து கொண்டிருந்தோம் சுமை இறக்கி வைக்கப்பட்டுள்ளது இதனால் அதிமுக பெறும் எழுச்சியை கண்டுள்ளது. கடந்த காலங்களில் பிஜேபி என்னும் கட்டையை காலில் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தோம்.

அதனால் பல தோல்விகளையும் அவமரியாதைகளையும் சந்தித்துக் கொண்டிருந்தோம். இப்போது காலில் கட்டிக் கொண்டிருந்த கட்டையை கழட்டி விட்டாச்சு. இனி அதிமுகவிற்கு வெற்றி முகம் தான்.

மேலும் அவர் கூறுகையில் திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி விட்டதாக பொய் கூறுகிறது எனவும், இவை அனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் எனவும், மத்திய அரசின் மீதும் மாநில அரசின் மீதும் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் எனவும், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளும் அதிமுக வென்றெடுக்க அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என பேசியுள்ளார். 

Share this story