கவர்னருக்கு, கருத்து சொல்ல அதிகாரம் இருக்கிறது : கவர்னர் தமிழிசை விளக்கம்

By 
mes4

வீரன் அழகுமுத்துக் கோன் சிலைக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவர் நெஞ்சுக்கு நேராக பீரங்கிகள் வைத்து போரிட்ட போதும் தையரிமாக எதிர் கொண்டவர். இன்றைக்கு விசாரணை என்று அணுகியவுடன் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்து விட்டது. அவரை போல் அழகு முத்துக்கோன் இல்லை.

இன்றைய இளைஞர்கள் வேறு விதமான நபர்களை வீரர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவரை போல் உள்ளவர்கள் தான் வீரர்கள். புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் மானியமாக ரூ.300 கொடுக்க உள்ளதாக அரசாணை வெளியாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில் ரூ.100 கொடுக்க உள்ளதாக கூறினார்கள். இன்னும் அதைபற்றி சத்தம் எதுவும் இல்லை.

இத்தனை வருடம் ஆட்சிக்கு வந்த பிறகும் இவர்கள் திட்டங்கள் மட்டும்தான் அறிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து உதவி தொகை விடுப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும். இங்குள்ள நிலைமையை எடுத்து சொல்ல கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதே போல 50 வருடங்களுக்கு முன்பாக கலைஞர் கருணாநிதி கவர்னர் வேண்டாம் என கடிதம் எழுதினார். அரை நூற்றாண்டாக தி.மு.க.வினர் கடிதம் மட்டும்தான் எழுதுகின்றனர்.

கவர்னருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் கருத்து சொல்ல அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கை பிடிக்காவிட்டால் கருத்துக்கள் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story