தலைமையா ஆமையா.? : ஓபிஎஸ் தரப்பு சரமாரி கேள்வி..  

By 
marudhu204

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவியுரை வருமாறு :

அவர் என்ன.. அம்மா காட்டிய அடையாளமா.? இல்லை, அம்மாவே மகுடம் சூட்டிய அலங்காரமா.?

இல்லை..விலாசம் தந்த விரல்களுக்கு மோசம் செய்யாத விசுவாசமா.? திறமைகளால் பெருமை சூடிய திவ்யதேசமா?

இல்லை..தேனமுது தமிழாலே திகைக்க வைக்கும் அண்ணாயிசமா.? ஆற்றல் பல குவிந்து கிடக்கும் அறிவுத்தேசமா.?

அரவணைத்து வழி நடத்தும் அன்புச் சரணாலயமா.? இல்லை, வெறுப்பவரையும் ஈர்க்கின்ற வசீகரத்து வசிப்பிடமா.?

இல்லை, வெற்றிகளை தொடராக்கும் வல்லமையின் பிறப்பிடமா.? எழுத்துக்கும் பேச்சுக்கும் இலக்கணமா.?

இல்லை, ஈகைக்கும் வாகைக்கும் இருப்பிடமா.? ததும்பாத நிறைகுடமா?

இல்லை, தமிழினத்து வரைபடமா.? லஞ்சத்தை கிஞ்சித்தும் அறியாத அதிசயமா.?

நெஞ்சத்தில் வஞ்சம் சூழ்ச்சி கொண்டிராத ஆச்சரியமா.? உயிருக்கு கேடு செய்யா மனித நேயமா.?

இல்லை, ஊழல் என்ற சொல் அறியா உத்தம சுவாசமா.? காவியத்தாய் கை காட்டிய தலைமையா.?

இல்லை, கழகத்தில் புகுந்துவிட்ட ஆமையா.? கூடிச்சனம் ஓட்டளித்த முதன்மையா./

இல்லை, கூவத்தூரில் குத்தகை எடுத்த முகமையா.? வெள்ளந்தி தொண்டரது விருப்பமா.? இல்லை, விருப்பத்து
மாறாக கோடித் தொண்டர் ஆலயத்தை பிடித்தாட்டும் குழப்பமா.?

இல்லை.. இல்லை..

கத்தைப் பணத்தை கழித்துப் பார்த்தால் அது..பிரத்யேகம் ஏதுமில்லாத பிளாஸ்டிக் குப்பைமா..புறநானூற்று இயக்கத்தை புதைக்க அலையும் புற்றுநோய் குற்றம்மா...

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story