'முதல்வரின் முகவரி' என புதிய துறை உருவானது : தலைமைச் செயலாளர்

The new department emerged as the 'Chief's Address' Chief Secretary

முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது :

முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.
 
முதலமைச்சர் தனிப்பிரிவின் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனிப்பிரிவின் கீழ், தற்போதுள்ள பல்வேறு அலுவலக பிரிவு அலுவலர்கள், முதல்வரின் முகவரி துறையின் கீழ் செயல்படுவார்கள்.

6 பொது குறை தீர்வு மேற்பார்வை அதிகாரிகள், இனிமேல் முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரியின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்.

தலைமைச் செயலகத்தின் முதல்வரின் முகவரி துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்பு துறையாக பொதுத்துறை செயல்படும்.

முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்கு தீர்வு காண, மாநிலம் முழுவதும் உள்ள ஒற்றை இணையதள முகப்பாக பயன்படுத்தப்படும். இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் செயல்படுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
*

Share this story