இங்கே ஒரே நிறுவனம் எடப்பாடியின் பைனான்ஸ் கம்பெனிதான் : ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு

By 
marudhu188

 அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ்., 'கம்பெனி முத்திரை'  என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

வீட்டைக் கட்டியவர் சமர்ப்பித்து பெற்ற வரைபட அனுமதிக்கு மாறாக கட்டிடம் கட்டப்பட்டால் அது குற்றம் எனச் சொல்லி, அனுமதி தந்த CMDA MMDA அல்லது மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்க உத்தரவிடுகிறது.

அதுபோலவே, கட்சிகள் நிறுவப்படுகிறபோது அதற்கென வகுக்கப்பட்ட விதிகளுக்கு மாறாக அக்கட்சி முன்னெடுக்கப்படும்போது, அதன் மீது தேர்தல் ஆணையம் நீதிமன்றம் உள்ளிட்ட நெறி காக்கும் அமைப்புகள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இந்த அடிப்படையில் தான் அதிமுக வின் சட்டவிதிகளுக்கு மாறாக, எடப்பாடியின் பைனான்ஸ் கம்பெனி மேற்கொண்ட அபகரிப்பு நோக்கத்திலான அத்துமீறல்களை நீதியரசர் ஜெயச்சத்திரனின் தீர்ப்பு கடுமையாக கண்டித்ததோடு கட்சி விதிகளை காப்பாற்றும் நோக்கில் மிகச் சிறந்த தீர்ப்பை அது வழங்கியது.

ஆனால், அதனைத் தொடர்ந்து நடந்த எடப்பாடிக்கு சாதகமான அத்தனை நிகழ்வுகளின் பின்னணியிலும் பா.ஜ.க. இருந்தது என்பதே சத்தியமான உண்மை.

ஆக, எம் ஜி ஆரின் விதிகளுக்கு மாறாக எடப்பாடியின் சதிகளுக்கு ஏதுவாக செயல்பட்டு எல்லா வகையிலும் எடப்பாடிக்கு உதவி செய்த பா.ஜ.க. வை,

பொன்னையன், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் போன்றவர்களை ஏவி விட்டு கடுமையாக விமர்சிப்பதின் பின்னோக்கம் என்ன.?

"இந்தியாவிலேயே பெரிய ஊழல் கட்சி பா.ஜ.க. தான் அது ஆர் எஸ் எஸ் சித்தாத்தங்களை முன்வைத்து தேசத்தை அழிக்க பார்க்கிறது" என்றெல்லாம் பொன்னையன் மிகக் கடுமையாக பா.ஜ.க.வை விமர்சிக்கிறார்.

அதே நேரத்தில்.. வேலுமணி, தங்கமணி போன்ற ஷிண்டேக்களும் அஜித்பவார்களும் அமைதி காத்து வருவதும் ஆச்சரியத்தை தருகிறது.

எப்படி பார்த்தாலும் நிலைப்பாடு இல்லாத கூட்டமாக குழப்பங்களின் குடோனாக இருக்கும் எடப்பாடியின் பைனான்ஸ் கம்பெனி இந்தியாவிலேயே முதன்முதலாக  வாக்காளர் பட்டியலை வைத்து உறுப்பினர் சேர்க்கை நடத்திக் கொண்டிருக்கிறது...

இப்பச் சொல்லுங்க.. பைத்தியக்காரன் கிழிப்பது கோவணத்துக்கும் ஆகாது என்ற ரகத்திலானது தானே. பதவிப்பித்து பழனிச்சாமியின் பாழாய் போன அரசியலும்,

வரலாறு காணாத வகையில் வாக்காளர் பட்டியலை வைத்து  உறுப்பினர் பட்டியல் தயாரிக்கும் ஒரே நிறுவனம் நம்ம எடப்பாடியின் பைனான்ஸ் கம்பெனி தான்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story