திரை இயக்குனர் எழில் தேர்வு செய்த தெக்கத்தி அரசியல்வாதி.!

By 
pca7

'திறமை இருந்தால், எட்டுத் திசைகளும் கிட்டும்' என்பது போல, திறமையானவர்கள் எல்லாத் துறைகளிலும் போராடி ஜெயிக்கின்றனர். அவ்வகையில், சினிமா- அரசியல் இரண்டும் தமிழ்நாட்டில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதற்கு திராவிடச் சுவடுகள் சாட்சியாகும்.

இந்நிலையில், பி.சி.அன்பழகன்.. முன்னதாக,  சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரி தயாரிப்பில், நடிகர் முரளி நடித்த காமராசு படம் இயக்கினார். அடுத்து, ஆன்மீக அறவழிகளை வலியுறுத்தும் 'அய்யா வழி' எனும் வாழ்வியலை  திரையில் வார்த்தவர் பி.சி. அன்பழகன்.

தற்போது இவர், 'துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி' போன்ற படங்களை இயக்கிய  இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகும் 'தேசிங்கு ராஜா-2' படத்தில் நடிகராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். 'டப்பிங்' பேசிக்கொண்டிருந்த பரபரப்பான நேரத்தில், பி.சி.அன்பழகன் தெரிவித்ததாவது:

'இயக்குனர் எழில், என் நண்பர் மட்டுமல்ல, மிகச் சிறந்த சகோதரரும் ஆனவர். (அரசியலை மையமாகக் கொண்ட..!?) இந்த கதைக்கு ஓர் சரியான கேரக்டர் தேவைப்பட்டிருக்கிறது, என்னை தேர்வு செய்திருக்கிறார். மிகச் சிறப்பாக படம் வந்திருக்கிறது' என்றார்.

இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் அதிமுக.வில் தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story