அவர்கள் முழு நாட்டையும் விற்றுவிடுவார்கள் : ராகுல் ஆவேச பேச்சு

இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது:-
பாஜக- ஆர்எஸ்எஸ்க்கு அதிகாரம் மட்டுமே வேண்டும். அதிகாரத்தைப் பெற எதையும் செய்வார்கள். அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள். முழு நாட்டையும் எரிப்பார்கள். நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
அது ஹரியானா, பஞ்சாப் அல்லது உத்தரபிரதேசமாக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தை மட்டுமே விரும்புவதால் அவர்கள் முழு நாட்டையும் விற்றுவிடுவார்கள். மேலும் இது காங்கிரசுக்கு இது சண்டை என்றும் கூறினார். ஒரு பக்கம் நீங்கள் நாட்டின் மீது அன்பு கொண்டு இருக்கிறீர்கள். நாடு புண்படும்போதோ, குடிமக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம், நீங்களும் பாதிக்கப்படுவீர்கள், வருத்தப்படுவீர்கள்.
ஆனால், அவர்கள் மனதில் அப்படியொரு உணர்வு இல்லை. ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வினருக்கு எந்த வலியும் இல்லை. ஏனென்றால், அவர்கள் நாட்டைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.