இது தான் நிஜம் : ஓபிஎஸ் தரப்பு விளக்கம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :
தனது அரசியல் அபகரிப்பை பொதுக்குழுவை வைத்தும்..பிறகு நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மூலமாகவும் நியாயப்படுத்திவரும் எடப்பாடி...
இப்போது மனிதத் தலைகளுக்கு விலை வைத்து திரட்டி மாநாடு நடத்தி, அதையும் தென்பகுதியில் நடத்தி தனக்கு தொண்டர்களிடம் பேராதரவு இருப்பதாக காட்டுவதற்கு பணத்தை வாரி இறைத்து வருகிறார்.
இது இப்படி என்றால்.. தேர்தல்களில் தன் செல்வாக்கை நிரூபிக்க இயலாத தொடர் தோல்வி தலைமையாக எடப்பாடி இருப்பதால், அதிமுகவை அவர் வழி நடத்துவதே தங்களுக்கு ஆதாயம் என்று தி.மு.க.வும் விரும்புகிறது.
அதேபோல..தி.மு.க.வுக்கு மாற்றாக வந்துவிட வேண்டும் என திட்டமிட்டு வேலை செய்து வரும் பா.ஜ.க. வும் அதையே விரும்புகிறது.
ஆனால், இதையெல்லாம் புரிந்துகொள்ளும் பக்குவமற்ற பதராகவும் பதவிப் பித்தராகவும் பழனிச்சாமி இருப்பதுதான் பரிதாபம்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.