இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் : முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

By 
Today is the 5th mega vaccination camp Chief Minister Stalin's interview


சென்னையில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

5-வது மெகா தடுப்பூசி முகாம் :

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட, பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. 

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இன்று 30 ஆயிரம் இடங்களில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஆய்வு :

சென்னையில் 1,800 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

கொரோனா தடுப்பூசி முகாம்கள் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பூங்கா உள்ளிட்டவைகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை, சின்னமலையில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். 

அவருடன் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

Share this story