விரைவில் போக்குவரத்துக்கு அனுமதி : முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

By 
Transport allowed soon Chief Minister Stalin's advice

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

21-ந்தேதி :

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக வட்டாரம் ‘கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசிய பணியாளர்களுக்கு தேவையான அளவில் பேருந்துகளை இயக்கி வருகிறோம். அதேபோல், பேருந்துகளில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, தமிழக அரசு அறிவித்தவுடன், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி, பேருந்துகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம். 

தமிழக அரசு அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். இருப்பினும், வரும் 21-ம் தேதிக்குப் பிறகு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்க வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

முதல்வர் ஆலோசனை :

தமிழகத்தில், அரசு பஸ்கள் இயக்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் 

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ் போக்குவரத்து சேவையை, மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா குறைந்து வரும் நிலையில், பஸ்  சேவைகளுக்கு தளர்வுகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Share this story