திரியும் திதியும் : ஓ.பி.எஸ். தரப்பு திட்டவட்டம் 

marudhu145

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

ஈ.பி.எஸ்ஸு க்கு இடமும் வலமுமாக இருப்பவர்களிடம் கூட,  உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் ஓ.பி.எஸ் வாழ்க என்று தான் அவர்களது உள் மனது சொல்லும்.

கட்சியின் விதிகளை காலில் போட்டு மிதித்து விட்டு, தொண்டர்களது உரிமையை பறிக்கும் எடப்பாடி பணச்சாமிக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் தருணத்திற்கு காத்திருக்கிறார்கள். 

விரைவில், எடப்பாடிக்கு எதிரான புரட்சி வெடிக்கப் போகிறது. அந்த புரட்சியின் திரிக்கு  தீ வைக்கும் திருவிழாவாக திருச்சி முப்பெரும் விழா மாநாடு அமையும்.

அக்டோபர் -14, 2010 ம் நாளில் அன்று  புரட்சித்தலைவி அம்மா போர்க்கோலம் பூண்ட அதே பொன்மலைத் திடல் அமைந்திருக்கும் காவிரிக்கரையில் திரளப் போகும் லட்சோப லட்சம் கழகத் தொண்டர்கள்.. 

மக்கள் திலகத்தின் சாஸ்வத சட்டங்களை மாற்றியும்.. மகராசி அம்மாவை நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்தே நீக்கியும் பதவிப்பித்துப் பிடித்து அலையும் எடப்பாடியின் அபகரிப்பு அரசியலுக்கு.. திதி கொடுத்து தீர்ப்பெழுதக் காத்திருக்கிறார்கள் என்பது சத்தியம்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story