உதயநிதி ஸ்டாலின் மீது, போலீசில் புகார்..

By 
comp1

* சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமச்சந்திரன், எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவர்னருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் வகையில் பேசி உள்ளார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்கிறார்.

முதல் நாள் நிகழ்வாக நாளை (25-ந் தேதி) திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் பிற்பகல் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துறை வாரியாக ஆய்வு செய்கிறார்.

2-வது நாள் 26-ந் தேதி ( சனிக்கிழமை) காலையில் நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 27-ந் தேதி நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

 

Share this story