வரைமுறை இல்லாத முறைகேடு : ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் தரப்பு விளாசல் 

marudhu168

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :

வரைமுறை இல்லாத முறைகேடு :  

வேட்புமனு தாக்கல் செய்ததில் முறைகேடு, டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு, பதினோரு மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு, 

கொரானா செலவுகளில் முறைகேடு, கொடநாடு சம்பவத்தில் முறைகேடு, நிலக்கரி இறக்குமதி முறைகேடு, கட்சியை கைப்பற்ற விதிகளை திருத்திய முறைகேடு..

மொத்தத்துல.. எடப்பாடி முறைகேடு இல்லாத துறை ஏது?

தலைமையும் திறமையும் :

கல்யாணத்தை சிறப்பாக நடத்தி வைப்பதில், மந்திரம் ஓதுகிற புரோகிதருக்கும் பங்குண்டு; மணமகளை தேர்வு செய்து கொடுக்கும் புரோக்கருக்கும் பங்குண்டு.

இவ்வளவு ஏன்..

அறுசுவையை சமைத்துக் கொடுக்கும் அடுப்பங்கரை சமையல்காரருக்கும் பங்குண்டு. அதுபோல, போர்க்களத்து வெற்றியில வாளெடுத்து சண்டையிடும் வீரனுக்கும் பங்குண்டு. கத்தியையே  கையில பிடிக்கத் தெரியாத புத்தி கொண்ட உளவாளிக்கும் பங்கு உண்டு.

கோடாரி வலுவானது என்றாலும்.. அது முடி வெட்ட உதவாது. பிளேடு ரெம்பவே கூர்மையானது என்றாலும் அதை வச்சு மரம் வெட்ட முடியாது.

எல்லாத்துக்கும் ஒரு சிறப்புண்டு.அததின் பயன்பாடு அறிந்து உபயோகப்படுத்துவதே சரியான திறமை; அதுதான் சாதனை படைக்கும் சரியான தலைமை.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story