தடுப்பூசி விநியோகம் : முதல்வர்கள், கலெக்டர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..

Vaccine distribution PM Modi consults with chief ministers, collectors ..

நாடு முழுவதும் 107 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

ஆனால், சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால், தடுப்பூசி போடும் பணி மந்தமாக இருக்கின்றது.

ஆலோசனை :

இந்நிலையில், நாடு முழுவதும் 50 சதவீதத்திற்கும் குறைவான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியதாவது :

இதுவரை கிடைத்துள்ள முன்னேற்றம் உங்கள் கடின உழைப்பால் தான். களப்பணியாளர்கள் பல மைல்கள் நடந்து தொலைதூர இடங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டார்கள். 

நாம், தற்போது தளர்ந்து போனால் ஒரு புதிய நெருக்கடி வரலாம். நோய் மற்றும் எதிரிகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. 

அதற்கு எதிராக இறுதிவரை போராட வேண்டும். எனவே, நாம் ஒரு சிறிய தளர்வைக் கூட கொண்டுவரக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.

நாட்டின் கொரோனாவுக்கு எதிரான போரில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நாங்கள் புதிய யுக்திகளை கையாண்டுள்ளோம். புதுமையான முறைகளைப் பயன்படுத்தினோம். 

உங்கள் பகுதிகளில் தடுப்பூசியை அதிகரிக்க, புதுமையான முறைகளில் நீங்களும் அதிகம் உழைக்க வேண்டும் என்றார். 

தமிழகம் :

தமிழகத்திலிருந்து திருவள்ளூர் மாவட்ட  கலெக்டர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். 

மேலும், ஜார்கண்ட், தமிழகம், மராட்டியம், மணிப்பூர், அருணச்சலம் ஆகிய மாநில முதலமைச்சர்களுடன் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.

30 சதவிகிதத்திற்கும் குறைவாக இரண்டு டோஸ் போட்ட மாநிலங்கள், 50 சதவிகிதத்திற்கும் குறைவாக 1 டோஸ் போட்ட மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
*

Share this story