சீமானுக்கு, விஜயலட்சுமி கடும் எச்சரிக்கை..

By 
sv1

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகார் தொடர்பான வழக்கு வளசரவாக்கம் போலீசில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த வழக்கை மீண்டும் தூசு தட்டும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்திருந்தார். பின்னர் அந்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டு விஜயலட்சுமி பெங்களூருக்கு சென்றார்.

இந்த நிலையில் விஜயலட்சுமி, பெங்களூரில் இருந்தபடியே சீமானுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

சீமான் என்னிடம் ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்டதில் இருந்து நான் கதறிக்கொண்டிருப்பதாக அவரது ஆதரவு யூடியூப் சேனலில் போட்டுள்ளனர். சீமானுக்கும் நன்றி கிடையாது. சீமான் சார்ந்த யூடியூப் சேனலுக்கும் நன்றி கிடையாது.

கடந்த 2008-ல் எனது அக்கா கணவர் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றதால் அந்த பிரச்சனையை முடித்து கொடுப்பதற்காகவே சீமானை போய் சந்தித்தேன். எனது அக்காவுக்கு அவர் நன்மை செய்யவில்லை. அக்கா மீதும் கருணை இல்லை. என் மீதும் கருணை கிடையாது. எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக சீமான் செய்து விட்டார்.

என்னை தூக்கி பெங்களூரில் போட்டாச்சி. பெங்களூரில் எனது அக்காவை பார்த்துக் கொண்டு எனக்கு ஒரு வாழ்க்கை என்பதை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த சீமானும் வரப்போவது இல்லை. நாம் தமிழர் கட்சியினரும் வரப்போவது இல்லை. நான் எல்லாவற்றையும் பெருந்தன்மையாக முடித்து கொடுத்துவிட்டு உங்க முகத்தை கூட இனி பார்க்கக் கூடாது என்கிற எண்ணத்தில் தான் அடுத்தகட்ட வேலைக்கு போயாச்சி. இத்தோடு நீங்கள் எல்லாம் விட்டு விட்டீர்கள் என்றால் ஓ.கே. திரும்பவும் எதையாவது புதிதாக செய்ய வேண்டாம்.

1 கோடிக்கு மான நஷ்ட வழக்கு போட்டிருக்கோம். சென்னைக்கு வாங்க என்று அழைத்து என்னை அவமானப்படுத்தும் வேலையை ஆரம்பித்தால் சரியாக இருக்காது. ஜகேஷ் என்கிற நடிகருடன் விஜயலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது என்று சீமான் கூறியுள்ளார். நான் சீமான் மீது ரூ.20 கோடிக்கு பெங்களூரில் மானநஷ்ட வழக்கு போடுவேன். கர்நாடககாரர்கள் இப்படி பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். என் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று இப்படி சீமான் பேசியுள்ளார். இதோடு வாயை மூடிட்டு போய் விடுங்கள். என்னிடம் வம்பிழுக்க வேண்டாம்.

இது தொடர்ந்தால் நான் மட்டுமல்ல ஜகேஷ் சாரையும் மானநஷ்டஈடு வழக்கு போட வைப்பேன். உங்களை தூங்க விடாமல் செய்து விடுவேன். இதற்கு மேல் ஏதாவது வாலாட்டும் வேலையை செய்தால் கர்நாடகத்துக்கு சீமானை வரவழைத்து திணறடித்து விடுவேன். எனவே எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.
 

Share this story