விஜய்யின் கட்சி பெயர், சின்னம்... மக்கள் இயக்க நிர்வாகிகள் டெல்லியில் முகாம்?

By 
vijay5

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், சினிமாவில் நடிப்பதுடன் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறார்.  சமீபத்தில், தமிழகம் முழுவதும் விஜய் நூலகம், விஜய் பயிலகம், விஜய் இலவச சட்ட மையம் ஆகியவற்றை அமைத்து வருகிறார்.

அரசியலில் விஜய் நுழைவதற்கு ஆன முதல்கட்டமாக தன் மக்கள் இயக்க மாணவரணி, மகளிரணி, இளைஞரணி, ஐடி அணி ஆகியோரை தனித்தனியே அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கடந்தாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்தது, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவி அளித்தது மக்களிடையே அதிகம் பேசப்பட்டது. இந்த  நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இன்று, விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன்,  சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விஜய் அரசியலில்  நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தன் கட்சிக்கு பெயர் வைக்க விஜய் தீவிரம் காட்டி வருவதாகவும், அரசியல் கட்சியைப் பதிவு செய்யவும், சின்னம் தேர்வு செய்யவும் இதுபற்றிய நடைமுறைகளை அறிந்து கொள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் அடங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Share this story