விஜய் போட்ட பரபரப்பு பதிவு..! - நாளைய தேர்தல் கூட்டணிக்கு இன்று அஸ்திவாரம்.?

By 
tvk7

கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி தனது 50வது பிறந்த நாளை கொண்டாடினார், பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான தளபதி விஜய். இந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உட்கொண்டு, 50-க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில், தன்னுடைய பிறந்தநாள் விழாவை பெரிய அளவில் கொண்டாட வேண்டாம் என்று அவர் தன் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தமிழக அளவில் பல இடங்களில், தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களும் மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்தனர். இது ஒருபுறம் இருக்க, தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், இன்று தன்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் தளபதி விஜய். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் வெளியிட்ட பதிவில்..

தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட பலருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். 

ஆனால், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது மட்டும், பாசத்திற்கும், மதிப்பிற்கும் உரிய திரு. செந்தமிழ் சீமான் அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். போதுமே.. இதை கண்ட நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? விஜயின் இந்த பதிவிற்கு பிறகு பல யூகங்களை கிளப்ப துவங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

எதிர்வரும் 2026ம் ஆண்டு தேர்தலில், TVK கட்சி நாம் தமிழர் கட்சியோடு இணைந்து கூட்டணியில் செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறி வருகின்றனர். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட, விஜயோடு கூட்டணி வைப்பது குறித்து பேசியது அனைவரும் அறிந்ததே. இப்போது இந்த தகவல் காட்டு தீயாக இணையத்தில் பரவி வருகின்றது.

Share this story