அமைச்சர் ரோஜாவின் ஊழலை அம்பலப்படுத்துவோம்: பாஜக அதிரடி..

* தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து அதன் முதல்வராக இருக்கும் கே.சந்திரசேகர ராவ் (கேசிஆர்), வழக்கம்போல் இம்முறையும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்ற காஜ்வெல் தொகுதியில் மூன்றாவது முறையாக கேசிஆர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த தொகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு போட்டியிட்டபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தெலங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 19,391 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காஜ்வெல் தொகுதியில் கேசிஆர் போட்டியிட்டபோது, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அதே பிரதாப் ரெட்டி அவரை எதிர்கொண்டார். அப்போது, கேசிஆர் 58, 290 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
* ஆந்திர மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி சித்தூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் அமைச்சர் ரோஜா எத்தனை கோடி சம்பாதித்துள்ளார் என்பது உட்பட அவரது ஊழல் கணக்குகள் முதல்வர் ஜெகனிடமும், அடுத்ததாக எங்களிடம் தயாராக உள்ளன. அதனை மக்கள் முன் எப்போது அம்பலப்படுத்த வேண்டுமோ அப்போது அம்பலப்படுத்துவோம். மேலும், வரும் 2024 சட்டப்பேரவை தேர்தலில் அமைச்சர் ரோஜாவுக்கு அவரது கட்சியே ‘சீட்’ வழங்காது. இவ்வாறு பானுபிரகாஷ் ரெட்டி பேசினார்.