பாசிமாலை் அணிவித்து, நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : முதலமைச்சர் ஸ்டாலின்

Welfare assistance to the bereaved by wearing pasimala Chief Minister Stalin

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 

நரிக்குறவர்கள், இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, நலவாரிய அட்டை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் பாசி மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

விழா மேடையில் பேசிய அஸ்வினி, தனது சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடையாள அட்டை, வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட உதவிகளை செய்து ஆதரவளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீல்மல்க நன்றி தெரிவித்தார். 

விழா முடிந்ததும், அஸ்வினி வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்து கலந்துரையாடினார்.

Share this story