பாமக எந்த கட்சியுடன் கூட்டணி? : அன்புமணி ராமதாஸ் பதில்
 

By 
ar1

ஈரோட்டில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்.எல்.சி. கடலூர் மாவட்டத்தின் பிரச்சனை இல்லை. இது தமிழகத்தின் பிரச்சனை. தமிழக அரசு 67 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை என்.எல்.சி கொடுத்து உள்ளது. விளை நிலங்களை அழித்து மின்சாரம் தேவையில்லை. காற்றாலை, நீர் மூலமாக தயாரிக்கலாம். தமிழகத்தின் நான்காவது நெல் உற்பத்தி பகுதியினை தற்போது தமிழக அரசு என்.எல்.சி. நிர்வாகத்தின் மூலம் விளை நிலங்களை அழித்து வருகிறது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவதுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது குறித்து உள்ள சாத்திய கூறுகளை பார்க்க வேண்டும். வாக்கு எந்திரங்கள் 12 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே உள்ளது. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் ஒரே நேர்த்தில் நடத்த தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் இல்லை. இதற்காக அமைக்கப்பட்ட குழு என்ன பரிந்துரை கூறுகிறதோ அதற்கு பிறகு நாங்கள் கருத்து தெரிவிப்போம்.

விரைவில் கூட்டணி குறித்து எங்களது முடிவை அறிவிப்போம். நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. தமிழகத்திற்கு எதிரானது. கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. தகுதியான மருத்துவரை நீட் தேர்வு உருவாக்கவில்லை. மருத்துவ படிப்பு என்பது வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நீட் தேர்வு குறித்து கவர்னர் தனிப்பட்ட கருத்துக்களை திணிக்க கூடாது. கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் இளைஞர்களிடம் மது, சூது,போதை பொருட்கள் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு பிரிவில் போதுமான காவலர்கள் இல்லை. தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Share this story