பாராளுமன்றத் தேர்தலில் ரஜினி, எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பார்? : சத்ய நாராயணா பேட்டி

By 
satya

நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணா இன்று விழுப்புரம் வந்தார். விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அண்ணாமலை சைவ ஓட்டலை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் விழுப்புரத்தில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் வீட்டிற்கு சென்று அவரது தந்தைக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரிடம் நிருபர்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்காவது ஆதரவு அளிப்பாரா? என கேள்வி எழுப்பினர்,

அதற்கு சத்தியநாராயணா பதிலளிக்கும் போது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டார். இப்போதும் மட்டுமின்றி எப்போதும் அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கமாட்டார் என்றார்.

உத்திரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்தியநாத் காலில் விழுந்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, இது ஒன்றும் புதியது அல்ல. சிறு வயது முதலே ரஜினிகாந்த் யோகியின் காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கமான ஒன்று தான் என்றார்.

 

Share this story