ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுமா? : சட்டசபையில் இன்று மீண்டும் தாக்கல்..

By 
rummy2

தமிழக சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா இன்று  (வியாழக்கிழமை) சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. ஆன்லைன் தடை சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.

நீதியரசர் சந்துரு குழு வழங்கிய பரிந்துரை அடிப்படையிலேயே மீண்டும் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். தடைச் சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அதற்கு அரசு அளித்த விளக்கங்களை பேரவையில் விளக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Share this story