மகளிர் உரிமைத்தொகை திட்டம் : விண்ணப்பம் பெற 24-ம் தேதிமுதல் சிறப்பு முகாம்..

* தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'சட்டங்களில், ஒரேமாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரேமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் தன்மை வழிவகுக்காது என்ற அடிப்படைக் கோட்பாட்டை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நமது நாட்டின் பலம், அதன் பன்முகத்தன்மையில் உள்ளதாகவும், பொது சிவில் சட்டத்தின் மூலம் அதை ஒருமுகப்படுத்த முயற்சிப்பதை விட, நாம் நமது பன்முகத்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
* கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விண்ணப்பங்களை பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். மேலும், சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.