18 ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தான்-நியூசிலாந்து மேட்ச் : விக்கெட் கீப்பர் நீக்கம்

By 
18 years later, Pakistan-New Zealand match Wicket-keeper fired

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இருந்து, நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பிளண்டெல் நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் 18 ஆண்டுகளுக்குப் பின்பு, நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் (செப்.17, 19, 21) மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் (செப்.25, 26, 29, அக்.1, 3) விளையாடுகிறது. 

கேப்டன் மகிழ்ச்சி :

இதற்காக, இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இருந்து நியூசிலாந்து வீரர்கள் குண்டு துளைக்காத பஸ்சில் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

அங்கு 3 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடித்ததும், பயிற்சி மேற்கொள்கின்றனர். 'பாகிஸ்தான் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக' நியூசிலாந்து பொறுப்பு கேப்டன் லாதம் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயம் :

நியூசிலாந்து அணியினருடன் பேட்டிங் பயிற்சியாளராக, இலங்கையை சேர்ந்த சமரவீராவும் சென்றுள்ளார். 

கடந்த 2009-ம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில், சமரவீராவுக்கு இடது காலில் குண்டு காயம் ஏற்பட்டது நினைவு கூரத்தக்கது.

இந்நிலையில், வங்காள தேசத்திற்கு எதிரான 4-வது இருபது ஓவர் போட்டியில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் பிளண்டெல்லுக்கு காயம் ஏற்பட்டது.  

இதனால், குறிப்பிட்ட காலம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என அவருக்கு மருத்துவர் நிஷில் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

மிட்செல் :

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து, நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பிளண்டெல் நீக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக, ஆல்-ரவுண்டர் டேரைல் மிட்செல் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share this story