டென்னிஸ் போட்டியிலிருந்து, 2 வீராங்கனைகள் திடீர் விலகல் : ஏன் தெரியுமா?

barb

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. 

இதில், 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. 

இந்நிலையில், இந்த தொடரில் விளையாடி வந்த 2 வீராங்கனைகள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதேபோல், மற்றொரு செக் குடியரசு வீராங்கனை மேரி பௌஸ்கோவாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடரிலிருந்து விலகியுள்ளார்.
*

Share this story