உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு 2 அணிகள் தகுதி பெறும் : ஜாம்பவான்கள் கணிப்பு 

By 
wc2023

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த தொடருக்கான 10 அணிகளும் ஏற்கனவே இந்தியா வந்து பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று வருகின்றன.

இந்நிலையில், ஒவ்வொரு கிரிக்கெட் பிரபலங்களும் இறுதி போட்டிக்கு செல்லும் இரண்டு அணிகள் எது என்பது குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறி இருக்கிறார்கள் அதை பார்க்கலாம். 

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியாவும் இங்கிலாந்தும் வரும் என்று தென் ஆப்பிரிக்கா வீரர் காலிஸ் தெரிவித்துள்ளார். இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு வரும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கு வரும் என்றும் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிச்சுற்றுக்கு வரும் என கூறியிருக்கிறார். 

தென்னாப்பிரிக்கா வீரர் டுபிளசிஸ் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அல்லது இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு வரும் என குறிப்பிட்டு இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதிப் போட்டிக்கு வரும் என கணித்திருக்கிறார்.

இதேபோன்று தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின் இந்தியாவும் இங்கிலாந்தும் பைனலுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார். இதேபோன்று இர்பான் பதான் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தகுதி பெறும் என குறிப்பிட்டு இருக்கிறார். தமிழக வீரர் முரளி கார்த்திக் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதி பெறும் என்றும் சஞ்சய் மஞ்சூரேக்கர் இறுதிப்போட்டிக்கு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முன்னேறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் இங்கிலாந்தும் வரும் என குறிப்பிட்டு இருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் மட்டும் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் வரும் என குறிப்பிட்டு இருக்கிறார். பிஞ்சை தவிர மற்ற வீரர்கள் அனைவருமே இந்தியா இறுதிப் போட்டிக்கு வரும் என ஒரே மாதிரி கருத்தை கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story