24 கேரட் கோல்டு ஐ போனை காணவில்லை: பிரபல நடிகை காவல் நிலையத்தில் புகார்..

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12ஆவது லீக் போட்டி கடந்த 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியால் இலக்கை எட்டி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 8ஆவது முறையாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தான் பிரபல நடிகையாக ஊர்வசி ரவுடேலா அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தனது 24 கேரட் கோல்டு ஐபோனை தொலைத்துவிட்டதாகவும், கண்டுபிடித்து தரும்படியும் கூறியுள்ளார். மேலும், சமூக வலைதளத்திலும் அனைவரது உதவியையும் நாடியுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எனது 24 காரட் கோல்டு ஐ போனை தொலைத்துவிட்டேன், யாரேனும் கண்டால் உதவி செய்யுங்கள். விரைவில் என்னை தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிட்டுள்ளார்.