26 வயதில் கால்பந்து வீராங்கனை மரணம்..

By 
fb11

மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் முக்கிய வீரரான வயலட்டா மிதுல் விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் மொத்த கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையான 26 வயது வயலட்டா மிதுல் தமது தேசிய அணிக்காக 40 முறை களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 4-ம் திகதி தமது சக கால்பந்து வீராங்கனை ஒருவருடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பில் கால்பந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் வீரர், சக வீரர் மற்றும் நண்பரின் திடீர் மரணத்தை எங்கள் இதயங்களில் ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர். 26 வயதேயான வயலட்டா மிதுல் ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story