டோனிக்கு 77 அடி உயர கட்-அவுட் வைத்து ரசிகர்கள் அமர்க்களம்..

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு இன்று 42-வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அவருக்கு வீரர்கள், பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
டோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் நந்திகமவில் டோனிக்கு பிரமாண்ட கட்அவுட்டுகள் வைக்கப்பட்டன.
ஐதராபாத்தில் 52 அடி உயரத்துக்கு கட்அவுட்டும், நந்திகமவில் 77 அடி உயரத்துக்கு கட்அவுட்டும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கட் அவுட்டில் இந்திய ஜெர்சியுடனும், மற்றொரு கட் அவுட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியுடன் டோனி படம் இடம்பெற்றிருந்தது.
நந்திகமவில் உள்ல கட் அவுட் மீது ரசிகர்கள் பால் ஊற்றி அபிஷேகம் செய்யும் வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. டோனி, இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர். அவரது தலைமையில் 20 ஓவர் உலக கோப்பை 50 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை இந்தியா வென்றது. ஐ.பி.எல். போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றது.