ஐபிஎல் விதிமுறையில், கே.எல்.ராகுலுக்கு மட்டும் அபராதம் ரூ.24 லட்சம் விதிப்பு, ஏன்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37-வது லீக் ஆட்டத்தில் மும்பை-லக்னோ அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, களமிறங்கிய மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் போது, பந்து வீசுவதில் லக்னோ அணி அதிக நேரம் எடுத்து கொண்டது.
இதனால், அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஐபிஎல் விதிப்படி 24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
மற்ற வீரர்களுக்கு ரூ. 6 லட்சம் அல்லது அவர்களது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சீசனில் 2-வது முறையாக கே.எல். ராகுலுக்கு மெதுவாக பந்து வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
*