இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து, அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் விலகல்..

stev

ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன. 3-வது ஒருநாள் போட்டி, இன்று கொழும்புவில் நடக்கவுள்ளது. 

இந்நிலையில், காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அடுத்ததாக, டெஸ்ட் தொடர் இருப்பதால் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வில் இருக்க மருத்துவ குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். 

ஸ்டீவ் ஸ்மித் உள்பட 7 ஆஸ்திரேலியா வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story