செஸ் ஒலிம்பியாட்  ஜோதியை, பிரதமர் மோடி ஏற்றிவைக்கிறார் : தமிழக விளையாட்டுத்துறை தகவல்
 

chess

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது :

'44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை மாதம் 28-ந் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. 

இதையொட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர் மோடி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த ஜோதி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 பெரும் நகரங்களுக்கு சென்று, ஜூலை மாதம் 28-ந் தேதி தமிழகம் கொண்டு வரப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்பட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட உள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இதுவரை இல்லாத வகையில் 188 நாடுகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். 

இதையொட்டி, வீரர்-வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் போட்டியை நடத்துவதற்கான அனைத்து வகையான முன்னேற்பாட்டு பணிகளை 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 

ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் அனைத்துப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிடும்' என்றார்.
*

Share this story