டயமண்ட் லீக் மீட் தொடர் : சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா

chopra

* இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்தது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிபா அமைப்பு நீக்கியது.

இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் ஜூனியர் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என பிபா தெரிவித்துள்ளது.

* சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும், செப்டம்பர் 7ம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறும் டயமண்ட் லீக் பைனலுக்கும் தகுதி பெற்றுள்ளார்.

Share this story