இந்திய கிரிக்கெட் அணியை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் : ஆஸ்திரேலிய வீரர் எச்சரிக்கை
 

t20er

உலகக் கோப்பை ஆடவர் ஆக்கி போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒடிசாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கிறது. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 44 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதுகிறது. குரூப் பிரிவுகளில் முதலிடத்தைப் பெறும் 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2, 3-வது இடங்களைப் பெறும் அணிகள், கிராஸ் ஓவா் ஆட்டங்கள் மூலம் மீதமுள்ள 4 காலிறுதி இடங்களுக்கு தகுதி பெறும்.

கடந்த 2018 உலகக் கோப்பையில் இந்திய அணி காலிறுதியில் நெதா்லாந்திடம் 2-1 என போராடி தோற்றது. கடந்த 1975-ல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, அதன் பின் பட்டம் வெல்லவில்லை. உலகக் கோப்பை ஆக்கிப் போட்டியை இந்தியா நடத்துவதால் இம்முறை இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆக்கி வீரர் கிளென் டர்னர், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம் அல்லது நெதர்லாந்து அணிகளுள் ஒன்று கோப்பையை வெல்லலாம் என அவர் கணித்துள்ளார்.

இந்தியாவில் விளையாடிய அனுபவம் குறித்து க்ளென் டர்னர் பேசுகையில், "நான் இந்தியாவை நேசிக்கிறேன். இந்திய ஆக்கியின் எழுச்சியைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும் அவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டிய நேரம் இது. உலகக் கோப்பை சொந்த மண்ணில் நடப்பதால் அவர்களுக்கு அது சாதகமாக உள்ளது" என்றார்.

Share this story