10-ந்தேதி முதல், மாவட்ட வாரியான செஸ் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு ஏற்பாடு
 

chess6

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. 

உலகளவில் செஸ் போட்டியில் சிறந்து விளங்கக்கூடிய முன்னணி வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 

இதில், 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா்.

இந்த போட்டியை மிக பிரமாண்டமான முறையில் நடத்திட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. 

இந்நிலையில், வரும் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தமிழகத்தில் மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து செஸ் தொடரை நடத்துகின்றன.

செஸ் தொடரில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://prs.aicf.in/players-ல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
*

Share this story