காமன்வெல்த் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்றது எப்படி? : ஸ்ரீசங்கர் விளக்கம்

common7

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. 

இதில், இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது. 

7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். 

இந்நிலையில், ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். 

இந்த வெற்றி குறித்து, 'முயற்சியும் பயிற்சியும் அர்ப்பணிப்புமே எனது வெற்றியாக எண்ணி மகிழ்கிறேன்' என்றார்.

இதன்மூலம், இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
*

Share this story