ஐபிஎல் அதிரடி : வார்னர் சாதனையை ஜோஸ் பட்லர் முறியடித்தது எப்படி?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது.
ஆரஞ்ச் நிற தொப்பி :
இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.
இந்நிலையில், நடைபெற்ற போட்டியில் ஜோஸ் பட்லர் புதிய சாதனை படைத்தார்.
863 ரன்கள் :
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில், டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி பட்லர் 2-வது இடத்தை பிடித்தார். பட்லர் இதுவரை 863 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் பெங்களூரு அணியின் விராட் கோலி (973 ரன்கள் - 2016 ஆம் ஆண்டு ) முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் டேவிட் வார்னர் (848 ரன்கள் - 2016) உள்ளார்.
*