ஐபிஎல் டுடே : ஐதராபாத்தை வீழ்த்தி, குஜராத் த்ரில் வெற்றி; அதிரடி ஆட்ட விவரம்..

By 
gt1

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. 

டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு  செய்தது. அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஐதராபாத் 6 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.

அபிஷேக் அசத்தல் :

தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அசத்தலாக ஆடி அரை சதமடித்தார். அபிஷேக் சர்மா 65 ரன்களிலும், மார்க்ராம் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

குஜராத் சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், யாஷ் தயாள், ஜோசப் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

சஹா அரைசதம் :

இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 

அவர் 68 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 22 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 10 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ராகுல் திவாட்டியா நிதானமாக ஆடினார்.

திவாட்டியா-ரஷீத் கான் :

குஜராத் வெற்றி பெற கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. திவாட்டியா, ரஷீத் கான் ஜோடி போராடியது. கடைசி பந்தில் சிக்சர் அடித்து, குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

ஐதராபாத் சார்பில் உம்ரான் மாலிக் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
*

Share this story