ஐபிஎல் டுடே : சென்னையை வீழ்த்தி, மும்பை வெற்றி.. ஆடுகள விவரம்..

By 
mi2

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை - மும்பை அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற மும்பை  அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி, முதலில் விளையாடிய சென்னை அணியில், தொடக்க வீரர் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

டோனி :
 
பின்னர், வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும், ராபின் உத்தப்பா 1  ரன்னுக்கும், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர், களம் இறங்கிய கேப்டன் டோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம், மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 

இறுதியில், சென்னை அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  

அதிகபட்சமாக, டோனி 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணியில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

திலக்-ஹிருத்திக் :

இதனைத் தொடர்ந்து 98 ரன்கள் இலக்குடன் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர் இசான் கிஷன் 6 ரன்னுக்கும், கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். 

டேனியல் சாம்ஸ் ஒரு ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். திலக் வர்மா 34 ரன்கள் குவித்து, கடைசிவரை களத்தில் இருந்தார். ஹிருத்திக் ஷோக்கீன் 18 ரன் அடித்தார்.  டிம் டேவிட் 16 ரன் எடுத்து களத்தில் இருந்தார்.

மும்பை அணி 14.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து, அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பிளே ஆப் தகுதி :

சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

போட்டியில் தோல்வி அடைந்ததால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. 
*

Share this story