சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார், சென்னையை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி..

By 
swim

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பெருமாள், போலீஸ்காரர். இவரது மனைவி சந்தியா. சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருக்கிறார்.

இவர்களது மகள் சஞ்சனா (வயது 10). 6-ம் வகுப்பு படித்து வருகிறார். 

நீச்சல் வீராங்கனையான சஞ்சனா, சாதனை நிகழ்ச்சிக்காக நேற்று வி.ஜி.பி. கடற்கரையில் இருந்து காலை 6.30 மணிக்கு கடலில் நீந்த தொடங்கினார். அவருக்கு பாதுகாப்பாக படகில் நீச்சல் வீரர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

25 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்து 11.30 மணியளவில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் கரை ஏறினார். 

இந்த தூரத்தை அவர் 4 மணி 48 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார். அவரது இந்த சாதனை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

நிகழ்ச்சி முடிந்ததும், அவருக்கு விவேகானந்தா கலையரங்கில் நடந்த பாராட்டு விழாவில் விருது வழங்கப்பட்டது.

Share this story