சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர்; மற்றும் வணிக விவகாரக் குழு தலைவர் நியமனம்..

By 
icc7

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜிமாப்வேயின் தாவெங்வா முகுலானி போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பார்க்லேவுக்கு ஐசிசி வாரியம் தனது முழு ஆதரவை தெரிவித்தது. இதன்மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பார்க்லே தலைவர் பதவியில் இருப்பார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமையாக உள்ளது என்றும், தனக்கு ஆதரவு அளித்த சக ஐசிசி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பார்க்லே கூறினார்.

இதேபோல், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெய் ஷா { அமைச்சர் அமித்ஷா மகன்} , ஐசிசி-யின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் உறுப்பினர் நாடுகளுக்குப் பணத்தை விநியோகம் செய்வதை ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு கவனிக்கிறது.

இந்த குழுவின் தலைவராக உள்ள ரோஸ் மெக்கோலம் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், அவருக்கு பின் தலைவராக ஜெய் ஷா பதவியேற்க உள்ளார்.

*

Share this story