வெற்றி மேல் வெற்றி : இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை

By 
deepak

நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர்.

 தீபக் ஹூடா 25 ரன்கள் அடித்தார். அதிபட்சமாக சஞ்சு சாம்சன் 43 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.

இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது தனது அறிமுக போட்டியில் இருந்து நேற்றைய போட்டிவரை அவர் இந்தியாவுக்காக மொத்தம் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹூடா தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். 

அதில் இருந்து இந்திய அணி ஏழு ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

இது ஒரு தனித்துவமான சாதனையாக கருதப்படுகிறது. இதன் மூலம் இந்திய அணியின் அதிஷ்ட வீரராக தீபக் ஹூடா திகழ்ந்து வருகிறார். இதற்கு முன்னர் ருமேனியா வீரர் சாத்விக் நடிகோட்லா, தான் அறிமுகமானதில் இருந்து 15 போட்டிகளில் அணியை வெற்றி பெற்ற சாதனையை படைத்துள்ளார். 

தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தனது முதல் சர்வதேச போட்டி விளையாடியதில் இருந்து 13 ஆட்டங்களில் அணியை வெற்றி பெற செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
*

Share this story