டிஎன்பிஎல் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில், நெல்லை-கோவை இன்று மோதல்..
 

tnpl

6-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 

இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

அப்போட்டியில், நெல்லை அணியை வீழ்த்தியது. வெளியேறுதல் சுற்றில் மதுரையை கோவை அணி தோற்கடித்து இருந்தது. 

இன்று கோவையில் நடக்கும் இறுதி போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நெல்லை-கோவை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. 

இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மோதும். 

பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை அணியில் சூரியபிரகாஷ், சஞ்சய்யாதவ், ஹரீஸ், ஈஸ்வரன், அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோர் உள்ளனர். 

ஷாருக்கான் தலைமையிலான கோவையில் அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய்சுதர்சன், அபிஷேக் தன்வார், முகிலேஷ், அஜித்ராம், திவாகர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
*

Share this story