இன்று, இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் : தலைவர் யார்?

fifa

இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கிறது.

இதில் தலைவர் பதவிக்கு முன்னாள் கால்பந்து வீரர்கள் பாய்ச்சுங் பூட்டியா, கல்யாண் சவுபே போட்டியிடுகிறார்கள். மேற்குவங்காள மாநில பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான 45 வயதான கல்யாண் சவுபேவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கோல் கீப்பரான இவர் மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அணிக்காக விளையாடி இருக்கிறார். முன்னாள் கேப்டனான பாய்ச்சுங் பூட்டியா இந்திய அணிக்காக 104 போட்டிகளில் ஆடியுள்ளார்.

எது எப்படி என்றாலும் 85 ஆண்டு கால இந்திய கால்பந்து வரலாற்றில் ஒரு வீரர் தலைவர் பதவியை முதல்முறையாக அலங்கரிக்கப்போகிறார். துணைத்தலைவர், பொருளாளர் பதவிக்கும் போட்டி நிலவுகிறது.

அதே சமயம் 14 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 14 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால் அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 34 மாநில கால்பந்து சங்கத்தை சேர்ந்தவர்கள், ஓட்டுப்போட்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உள்ளனர்.
 

Share this story