இன்று, புரோ கபடி இறுதி ஆட்டம் : சாம்பியன் பட்டம் வெல்லப்போவது ஜெய்ப்பூரா?புனேயா?

kabaddi3

9-வது புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் மிகவும் வலுவான அணியான ஜெய்ப்பூர் 'லீக்' ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்தது. அரை இறுதியில் பெங்களூருவை எளிதில் வீழ்த்தியது. புனேயை வீழ்த்தி 2-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் ஜெய்ப்பூர் அணி இருக்கிறது.

அந்த அணி அறிமுக கபடி போட்டியில் (2014) சாம்பி யன் பட்டம் பெற்றது. 4-வது சீசனில் இறுதி ஆட்டத்தில் (2016) பாட்னா விடம் தோற்றது. புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த புனே அணி முதல் முறை யாக சாம்பியன் பட்டம் பெறும் வேட்கையில் உள்ளது.

புனே அணி முதல் முறையாக இறுதி போட்டி யில் ஆடுகிறது. அரை இறுதியில் தமிழ் தலைவாசை கடும் போராட்ட த்திற்கு பின்னரே வென்றது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 2 முறையும் புனே அணிதான் வெற்றி பெற்று இருந்தது.

Share this story