நயன்தாராவை வைத்து டோனியின் நிறுவனம், படம் தயாரிப்பு : தகவல் உண்மையா?

nayan

நடிகை நயன்தாராவை வைத்து, டோனியின் தயாரிப்பு நிறுவனமான 'டோனி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் புதிய படத்தை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன. 

இந்த தயாரிப்புப் பணியில், ரஜினியின் பள்ளியில் பணியாற்றி வந்த சஞ்சய் என்பவர் இணைந்திருக்கிறார் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்த தகவல் வெளியான மறுநாளே டோனி எண்டர்டெயின்மெண்ட நிறுவனம் சார்பில், ஒரு மறுப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். 

அந்த அறிக்கையில், நாங்கள் தற்போது சஞ்சய் என்ற நபருடன் எந்த படத்தயாரிப்புப் பணியிலும் ஈடுபடவில்லை. 

சஞ்சய் என்ற பெயரில் நாங்கள் யாரையும் பணியமர்த்தவில்லை. அந்த பெயரில் வெளியாகும் போலியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம். 

இருப்பினும் சுவாரஸ்மான திரைப்படங்களை எடுப்பதற்கான பணிகளில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். 

படத்தயாரிப்பு உறுதியானபின், அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

டோனி நிறுவனத்திற்காக, விக்னேஷ் சிவன் ஒரு விளம்பரப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story